×

அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

சென்னை: அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் ராஜ்நாத் சிங்கிடம் கேட்க விரும்புகிறேன், சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் தருமென, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அந்த அறிக்கையைப் படித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராஜ்நாத் சிங் கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை appeared first on Dinakaran.

Tags : MINISTER ,RAJNATH SINGH ,P. Chidambaram ,Chennai ,Senior ,Congress ,p. Chidambaram Veedenai ,
× RELATED 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக...