×

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரி இளைஞர் பலி: குடும்பத்தினர் போலீசில் புகார்

புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு வயது 26. இதில் ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று ஹேமசந்திரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க பம்மல் மருத்துவர்கள் சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் மாரடைப்பு காரணமாக ஹேமசந்திரன் இறந்து விட்டதாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரன் குடும்பத்தினர் பம்மலில் செயல்படும் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரி இளைஞர் பலி: குடும்பத்தினர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpettai D. V. Selvanathan ,Hemachandran ,Hemerajan ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை