×

10 நாள் எம்பிஏ படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி

புதுடெல்லி: அங்கீகரிக்கப்பட்டது போன்ற போலி ஆன்லைன் 10 நாள் எம்பிஏ படிப்புக்களில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் மனீஷ் ஜோஷி கூறியதாவது: சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் உயர்கல்வி முறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை போன்ற சுருக்கமான படிவங்களுடன் ஆன்லைன் படிப்புக்களை வழங்குகின்றன.

குறிப்பாக 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்புக்கான வகுப்பை ஆன்லைனில் வழங்குவதாக கூறி மோசடியாக சேர்க்கையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. எந்தவொரு ஆன்லைன் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அது செல்லுபடியாகுமா என்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

The post 10 நாள் எம்பிஏ படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி appeared first on Dinakaran.

Tags : UGC ,NEW DELHI ,University Grants Commission ,University Grants Committee ,Manish Joshi ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...