×

மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசிய கடற்படையின் 90வது ஆண்டுவிழா அடுத்த மாதம் கொண்டாடப்பட்ட உள்ளது. இதற்காக கடற்படைக்கு சொந்தமான இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களிலும் இருந்த 10 பேர் உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Malaysia ,KUALA LUMPUR ,Malaysian Navy ,Navy ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...