×

மோடி அரசு தரும் நெருக்கடி: இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக ஆஸி. நிருபர் அவனி தியாஸ் புகார்

டெல்லி: மோடி அரசு தரும் நெருக்கடிகளால் இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பெண் நிருபர் அவனி தியாஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வானொலிக்காக டெல்லியில் பணியாற்றி வந்த பெண் நிருபர் அவனி தியாஸ் எக்ஸ் தளத்தில் மோடி அரசு பற்றி விமர்சனம் செய்துள்ளார். காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஷர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி, தான் செய்தி வெளியிட்டதால் விசா தர மறுத்ததாக புகார் அளித்துள்ளார். அதில், ஏற்கனவே தனது விசாவை நிறுத்தி வைத்திருந்த மோடி அரசு, ஆஸி. அரசின் தலையீட்டால் விசாவை புதுப்பித்ததாகவும், தான் ஆஸி.க்கு திரும்புவதற்கான டிக்கெட் எடுத்தபிறகு விமானம் புறப்பட 24 மணி நேரம் முன்புதான் அரசு விசா வழங்கியது என்று அவனி விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என கூறிக்கொள்ளும் மோடி, தேர்தலுக்கு முன் தன்னை வெளியேறச் செய்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

The post மோடி அரசு தரும் நெருக்கடி: இந்தியாவைவிட்டு வெளியேறுவதாக ஆஸி. நிருபர் அவனி தியாஸ் புகார் appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Avani Díaz ,Delhi ,Avani Diaz ,Awani Díaz ,Modi government ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி