×

இந்தியாவில் அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் 3வது இடம் பிடித்தது ஈரோடு மாவட்டம்

டெல்லி: தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி., பீகாருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் புவனேஸ்வரும், 2வது இடத்தில் கடப்பாவும் உள்ளன. புவனேஸ்வர் மற்றும் கடப்பாவில் 111 டிகிரி பரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இந்த கோடை கால வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்றும் வீசுவதால் குழந்தைகள், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. பசிபிக் கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள எல்நினோ காரணமாக இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தகித்து வருகிறது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 3 முதல் 5 டிகிரி வரை வெப்ப அளவு அதிகரித்தது. சமீபகாலமாக வெப்ப நிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவ மழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது..

ஒடிசாவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியசாக பதிவானது, மாநிலத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் 3வது இடம் பிடித்தது ஈரோடு மாவட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode district ,India ,Delhi ,Indian Meteorological Centre ,Tamil Nadu ,Karnataka Inner Districts ,Odisha ,U. BP ,Bihar ,West Bengal ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...