×

கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது

தஞ்சை: கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேர் 10 அடி பள்ளத்தில் சிக்கியது. கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது 10 அடி பள்ளத்திற்கு தேர் உள்வாங்கியது. தெற்கு வீதியில் ராமசாமி கோயில் அருகே வந்தபோது, தேரின் வலதுபுற முன்பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவதாகும். ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான இந்தத் தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடையிலுள்ளது. இந்தத் தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்திரை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டம் சாலைகளில் தேர் சுற்றி வர ஆரம்பித்தது. இந்நிலையில் கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது 10 அடி பள்ளத்திற்கு தேர் உள்வாங்கியது. தெற்கு வீதியில் ராமசாமி கோயில் அருகே வந்தபோது, தேரின் வலதுபுற முன்பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

The post கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Sarangapani ,Kumbakonam ,Thanjavur ,Ramasamy temple ,
× RELATED கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்..!!