×

முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன் கோபாலன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கமல்ஹாசன் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் விமானப்படை வீரருமான நிவாசன் கோபாலன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: கலைஞானி கமல்ஹாசன் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் விமானப்படை வீரருமான நிவாசன் கோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.

அவரை இழந்து வாடும் சகோதரர் கமல்ஹாசனுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன் கோபாலன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : M.K.Stal ,Air ,Gopalan ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Kamal Haasan ,DMK ,
× RELATED நாய்களுக்கென பிரத்யேக விமான சேவையை தொடங்கிய பார்க் ஏர் நிறுவனம்..!!