×

லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த வழக்கின் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஜாமின் விதிமீறல்: உச்சநீதிமன்றம்


டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொலை செய்த வழக்கின் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஜாமின் விதிமீறல் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. லக்கிம்பூர் வழக்கில் ஜாமின் பெற்றுள்ள ஆஷிஷ் மிஸ்ரா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக விவசாயிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லக்கிம்பூர் சம்பவத்தில் பலியான விவசாயிகளின் உறவினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.

The post லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த வழக்கின் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஜாமின் விதிமீறல்: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Ashish Mishra ,Lakhimpur ,Jam ,Supreme Court ,Delhi ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு