×

கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கடலூர்: கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தல் அன்று கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரவியது. இந்த சம்பவம் பரபரப்பான நிலையில், கடலூர் மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து தீர விசாரித்து நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.

போலீஸ் விசாரணையில், கோமதி குடும்பத்தினருக்கும், கலைமணி என்பவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதில் கலைமணி மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துவந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் செய்ய கோரி பலமுறை வற்புறுத்தியும், கோமதி குடும்பத்தினர் அதனை வாபஸ் வாங்காத காரணத்தினால் அன்று மீண்டும் ஏற்பட்ட தகறாரிலேயே கோமதி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். தேர்தலுக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, இதுகுறித்து தவறான காணொளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான காணொளியை தொடர்ந்து பரப்பியதாக வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது. சமூக வலைதளங்களில் சின்ஹா என்பவர் ரோஷன் என்ற பெயரில் தவறான கருத்தை பரப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரபாகர் மற்றும் சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீது சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவறான தகவல் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும், கைது செய்யப்படுவார்கள் என சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Gomathi ,Sreemushnam ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...