×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

சென்னை: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனையானது. இது வரலாற்றில் உச்சப்பட்ச விலையாகும். அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,845க்கும், சவரன் ரூ.54,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.56 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...