×

காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கஞ்சா மற்றும் போதை ஆசாமிகள் காவலர்களை பொது வெளியில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. குறைந்த வயது இளைஞர்கள் காவலர்களை தாக்குகின்ற அளவிற்கு, அவர்களுக்கு தைரியத்தை யார் கொடுத்தது. எனவே உடனடியாக ஆளும் அரசு இரும்புக்கரம் கொண்டு கஞ்சா போதையை தடுத்து சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டும். காவல்துறையினரே தாக்கப்படுகிறார்கள் என்றால், வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

The post காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Demudika ,
× RELATED பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக...