×

இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்

கொழும்பு: இலங்கையில் கார் பந்தயத்தின் போது பார்வையாளர்கள் இருந்த இடத்துக்குள் கார் புகுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இலங்கை நாட்டின், ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கார் பந்தயத்தை கண்டுகளித்தனர். பந்தயத்தில் கலந்து கொண்ட கார்கள் சீறிப்பாய்ந்தன. அப்போது, ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து பார்வையாளர்கள் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயமடைந்தனர். காவல் துறை செய்தி தொடர்பாளர்,‘‘ பலியானவர்களில் 8 வயது சிறுவன், கார் பந்தய உதவியாளர்கள் 4 பேர் அடங்குவர்’’ என்றார்.

The post இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sri Lanka ,Uva province ,Badulai district ,Thiatala ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...