×

பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த மீனவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும் மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடித்து வருகின்றனர். இதில் கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இன்று அதிகாலை கோட்டைக்குப்பம் மீனவர்களின் வலைகள் பாதுகாக்கப்படும் இடத்தில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

அதை பார்த்ததும் மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீன்பிடி வலைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. மீன்பிடி வலைகள் மட்டுமின்றி இறால் பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் உள்பட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பழவேற்காட்டில் நள்ளிரவில் மீன்பிடி வலைகள் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : BONNERI ,THIRUVALLUR DISTRICT ,Kottaikupam ,Phavukhadu lake ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி