×

மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு

மும்பை: லோக்சபா தேர்தலை ‘பவார்’ குடும்பத்தினருக்கு இடையே நடக்கும் சண்டையாக பார்க்க முடியாது என, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் பாராமதி மக்களவைத் தொகுதியில், அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சரத்பவாரின் மகளும் சிட்டிங் எம்பியுமான சுப்ரியா சுலே போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது அஜித்பவார் பேசுகையில், ‘லோக்சபா தேர்தலை ‘பவார்’ குடும்பத்தினருக்கு இடையே நடக்கும் சண்டையாக பார்க்க முடியாது. மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டியாக பார்க்கிறேன். ஒன்றியத்தில் பாஜகவும், பிரதமர் மோடியும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.

The post மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Roddy ,Rahul ,Ajit Bawar ,Mumbai ,Maharashtra ,Deputy Chief ,Lok Sabha ,Bawar ,Paramati ,Deputy First Minister ,Nationalist Congress ,Collision ,
× RELATED மோடியால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்...