×

78.16 சதவீதம் வாக்குபதிவு

 

நாமக்கல், ஏப்.21: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக மாதேஸ்வரன், அதிமுக வேட்பாளராக ராகா தமிழ்மணி, பாஜ வேட்பாளராக ராமலிங்கம் உள்பட 40 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் 7 லட்சத்து 4270 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 610 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 156 என மொத்தம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

The post 78.16 சதவீதம் வாக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Sangakiri ,Rasipuram ,Senthamangalam ,Tiruchengode ,Paramathivelur ,Namakkal Parliamentary Constituency ,Matheswaran ,DMK ,AIADMK ,Dinakaran ,
× RELATED வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு...