×

வெயிலில் சுருண்டு விழுந்து 2 பேர் பலி

 

பல்லாவரம், ஏப்.21: சென்னையில் கடந்த ஒரு வார காலமாக அனல் பறக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் செங்குன்றம் தனியார் திருமண மண்டபம் நேதாஜி தெருவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெயிலில் மயங்கி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் யார் எந்த ஊர் என்று தெரியவில்லை. அவர் சிவப்பு நிறம் முழங்கால் சட்டையும், கருப்பு கலரில் பேண்ட்டும் அணிந்திருந்தார். சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் எதிரே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக இருப்பதாக பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post வெயிலில் சுருண்டு விழுந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : 2 ,Pallavaram ,Chennai ,Sengunram ,Netaji ,
× RELATED 90 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்