×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி

 

செங்கல்பட்டு, ஏப். 21: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற தனியார் கல்லூரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ஜான் சம்பத் (46). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் ரயில்வே மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜான் சம்பத் தூக்கி வீசப்பட்டார். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,John Sampath ,Jayaraman ,Uttaramerur ,Patta, Kanchipuram district ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...