×

இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார்: காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருவதாக காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். முழுமையான ஊழல் பாடத்தின் கீழ் நிதி, வர்த்தகம் குறித்து பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வகுப்பு எடுக்கிறார். சோதனைகளை நடத்தி எப்படி நன்கொடை வசூலிப்பது என விசாரணை அமைப்புகளுக்கு மோடி வகுப்பு எடுக்கிறார். நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை எப்படி வழங்குவது எனவும் மோடி வகுப்பு எடுக்கிறார். ஊழல்வாதிகளை வாஷிங் மெஷின் மூலம் எப்படி சலவை செய்வது என்பது குறித்தும் மோடி பாடம் நடத்துகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

மோடியின் ஊழல் பள்ளியை இந்தியா கூட்டணி மூடும்”:

பாஜக தலைவர்களுக்கு ஊழல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஊழலின் குகையாக பாஜக மாறியுள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பாஜக தலைவர்கள் ‘முழு ஊழல் அறிவியலை’ உள்ளடக்கிய ‘கிராஷ் கோர்ஸ்’ எடுக்கிறார்கள். அமேதியில் இருந்து வயநாடுக்கு சென்ற ராகுல் மீதான ‘கடுமையான தாக்குதல்’ பாடத்தில் அடங்கும். மோடியின் ஊழல் பள்ளியையும், ஊழல் பாடத்தையும் இந்தியா கூட்டணி மூடிவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார்: காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Kong ,President ,Delhi ,Kang ,Rahul Gandhi ,PM Modi ,BJP ,Rahul ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி