×

வாக்கு மையம் அருகே அதிமுக சின்னம் பொறித்த 60 பூத் சிலிப்கள் பறிமுதல்: 4 பேர் மீது வழக்கு

பெரம்பூர், ஏப்.20: வியாசர்பாடி பன்னீர்செல்வம் தெரு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது காலை 11 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பன்னீர்செல்வம் தெருவில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னம் பொறித்த பூத் சிலிப்பை பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக செம்பியம் காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற செம்பியம் ஆய்வாளர், அங்கு விசாரணை செய்ததில் அதிமுக சின்னம் பொறித்த பூத் சிலிப் அங்கு இருந்தது. இதையடுத்து பெரம்பூர் தொகுதி தேர்தல் பார்வையாளர்சந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்து சுமார் 60 பூத் சிலிப்புகளை கைப்பற்றினார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், செம்பியம் போலீசார் வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தமிம் அன்சாரி, எத்திராஜ் ஜெனி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வாக்கு மையம் அருகே அதிமுக சின்னம் பொறித்த 60 பூத் சிலிப்கள் பறிமுதல்: 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Perambur ,Corporation Middle School ,Vyasarpadi Panneerselvam Street ,Panneerselvam Street ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...