×

குன்னத்தூர் சத்திர கடைகளால் எவ்வளவு வருமானம்? மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

 

மதுரை, ஏப்.20: மதுரையை சேர்ந்த சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை குன்னத்தூர் சத்திரம் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை. சத்திர அறக்கட்டளை சொத்தை அதன் நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை. அறப்பணியை மேற்கொள்ளவில்லை. எனவே அச்சொத்துக்களை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் அறப்பணிகளில் ஈடுபட உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘குன்னத்தூர் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கடைகளுக்கான செலவுகள் மற்றும் 2022, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகள் வரை கடை வாடகையாக எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பது குறித்து மதுரை மாநகராட்சி தரப்பில் அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post குன்னத்தூர் சத்திர கடைகளால் எவ்வளவு வருமானம்? மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kunnatur Satra ,Madurai ,Chandrasekaran ,Aycourt Madurai ,Kunnathur Satram ,Chatra Foundation ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை