×

ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை இலை எங்களிடம் வந்து சேரும்: ஓபிஎஸ் நம்பிக்கை

பெரியகுளம்: ‘ஜூன் 4ம் தேதிக்குப் பின்பு அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் எங்களிடம் வந்து சேரும்’ என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வரும் பாஜ கூட்டணி சார்பில், ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். அவருடன் அவரது மகன்கள் எம்பி ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோரும் வாக்களித்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், “ராமநாதபுரத்தில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் பாஜ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் மீண்டும் இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சி எங்களிடம் வந்து சேரும்’’ என்றார்.

The post ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை இலை எங்களிடம் வந்து சேரும்: ஓபிஎஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,Periyakulam ,O. Panneerselvam ,Thenkarai ,BJP ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...