×

இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி

லண்டன்: ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் சிலர் டண்டி பல்கலைகழகத்தில் படித்து வருகின்றனர்.அதில் 4 மாணவர்கள் கடந்த 17ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பிளேயர் அதோல் சுற்றுலா தலத்துக்கு சென்றனர். கேரி மற்றும் டம்மல் ஆகிய 2 ஆறுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் அவர்கள் குளித்தனர். அதில் 2 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களுடைய நண்பர்கள் அவசர உதவியை அழைத்தும் அவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை.

இது பற்றி கூறிய ஸ்காட்லாந்து காவல்துறை செய்தி தொடர்பாளர்,‘‘ நீர்வீழ்ச்சியில் குளித்த 22 மற்றும் 27 வயது உடைய 2 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர், 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல் கூறாய்வுக்கு பின் அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார். இறந்த 2 மாணவர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

The post இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : England ,London ,Andhra Pradesh ,Dundee University ,Blair Athol ,Scotland ,Gari ,Dummal ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்