×

பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் வாக்குச்சாவடி மையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, 2 மணி நேர தாமதத்துக்கு பின் மீண்டும் தொடங்கியது.

The post பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vishika ,Jeyangondam ,Liberation Tigers Party ,Narasinghe Palayam ,Jayangondam ,Ariyalur district ,
× RELATED 10 ஆண்டு ஆட்சியில் பாஜவுக்கு மிகவும்...