×

அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்: வாக்களித்த பின் எல்.முருகன், தமிழிசை பேட்டி

அண்ணாநகர்: சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெயிலாக இருந்தாலும் வாக்காளர்கள் வந்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். முதல்முறை வாக்களிப்பவர்கள் கண்டிப்பாக வந்து வாக்கினை செலுத்த வேண்டும். முதல்முறை வாக்கு செலுத்துவது மிகப்பெரிய அனுபவம். கண்டிப்பாக அனைவரும் வாக்குசெலுத்த வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் திருவிழா இந்த தேர்தல். வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. இந்த நாட்டினுடைய வளர்ச்சி தேசத்தினுடைய வளர்ச்சி என்பதை மனதில் வைத்து கொண்டு 2047ல் இந்தியா வல்லரசு நாடாக ஆகவேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பள்ளியில் வாக்கு செலுத்திய பிறகு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல் தலைமுறை வாக்காளர்கள் மிக வேகமாக வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

100 சதவீத வாக்கை நாட்டினுடைய வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும். கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்த தேசத்தை ஆள போகிறவர்கள் முதல்முறை வாக்கு செலுத்தக்கூடிய வாக்காளர்கள்தான். சில நேரங்களில் குளறுபடிகள் வருவது சகஜம்தான். அதை உடனடியாக வாக்கு மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிசெய்வார்கள். கருத்து கணிப்பு குறித்து இந்த நேரத்தில் பேசுவது முறையாக இருக்காது. ஆனாலும் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஊழலற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். இதற்காக அனைவரும் ஜனநாயக கடமையான வாக்குகளை செலுத்தவேண்டும்.

The post அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்: வாக்களித்த பின் எல்.முருகன், தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,Annanagar ,South ,Chennai ,BJP ,Soundararajan ,Saligramam ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...