×

யானை தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை , தளி அருகே மாடக்கல் ஊராட்சி மூகண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தலிங்கப்பா (65) . இவர்,நேற்று கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ள உலிபண்டா வனப்பகுதி, சம்பிகே மரதொட்டி அருகே உள்ள தனியார் கிரானைட் குவாரி பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, கர்நாட வனப்பகுதியிலிருந்து திடீரென வந்த ஒற்றை யானைஅவரை தும்பிக்கையால் தாக்கி வீசியது. இதில், சித்தலிங்கப்பா உயிரிழந்தார்.

The post யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Siddhalingappa ,Mooganda ,Matakkal Panchayat ,Dhenkanikottai, Thali ,Ulipanda Forest ,Sampike Marathotti ,Karnataka Forest ,Dinakaran ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே பிரசவ வலியால்...