×

தபால் ஓட்டுபோட்டு வீடியோ வெளியீடு மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வேம்பனியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் தபால் வாக்களிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் வாக்களிக்க வந்த சதீஷ்குமார், வாக்களித்த வாக்குச்சீட்டினை வேட்பாளர் படம், சின்னத்துடன், யாருக்கு வாக்களித்தேன் என்பதை தெரிவிக்கும் விதத்தில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காளையார்கோவில் போலீசார், சதீஷ்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தபால் ஓட்டுபோட்டு வீடியோ வெளியீடு மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Central Reserve Force ,Sivagangai ,Satish Kumar ,Vembani ,Kalayarkovil, Sivagangai district ,Central Reserve Police Force ,Sivaganga Lok Sabha ,Kalaiyarkoil ,
× RELATED கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு