×

சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,957-ல் இருந்து ரூ.12,716-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674-ல் இருந்து ரூ.8555-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக விமான டிக்கெட் ரூ.11,531-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – சேலம் இடையே வழக்கமாக ரூ.2,433-ஆக உள்ள விமான டிக்கெட் கட்டணம் ரூ.5572-ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3342-ல் இருந்து ரூ.8616-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

The post சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goa ,Salem ,Chennai Domestic Airport ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது