×

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

புதுக்கோட்டை, ஏப்.18: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததால் வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை சத்தம் இன்றி வீதிகள், கிராமங்கள் வெறுச்சோடி காணப்படுகிறது.இந்தியாவின் 18 வது பொதுத்தேர்தல் நாளை தொடங்கி நடைபெற்ற உள்ளது.  தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்கு சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வேட்பு மனுதாக்கல் முடிந்த பிறகு அனைத்து வேட்பாளர்கள் சார்பில் நிர்வாகிகள் வாக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பில் மைக்செட் கட்டி பிரசாரம் செய்ய வாகனங்களுக்கு தேர்தல் ஆணைத்திடம் அனுமதி பெற்றனர். அனுமதி பெற்றவுடன் அவர்கள் சார்ந்த கட்சி, கட்சியின் தலைவர், வேட்பாளரின் சின்னம் உள்ளிட்டவற்றை சொல்லி ஆடியோ பதிவு செய்து ஸ்பீக்கரில் பேசவிட்டு கொண்டு தெரு தெருவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நல்ல பேச்சாளர்களை கொண்டு மைக்கில் பேசியபடி பிரச்சாரம் செய்தனர். வாக்காள பெருமக்களே வருகிற பொத்தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம், வெற்றியின் சின்னம் என்று பேசியபடி சென்றுகொண்டு இருந்தனர்.

சில நேரங்களில் ஒரே இடத்தில் இரண்டு வேட்பளர்கள் பற்றிய பிரசாரமும் இடம் பெற்றது. பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகள், கிராம பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக வாக்காளே பெருமக்களே என்ற வார்தை ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதனால் வேட்பாளர்கள், அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது. இதனால் நேற்று மாலையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் வாக்காள பெருமக்களே என்று வார்த்தை ஒலிக்காமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒருவாரமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் காணப்பட்ட வீதிகள் சப்தமின்றி களையிழந்து காணப்பட்டது. மேலும், வெயிலும் சுட்டெரிப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

The post அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,India ,18th general election ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!