×

அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமனத்தை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த மனுவில் பிரகாஷை பதிவாளராக நியமிக்க சிண்டிகேட் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிண்டிகேட் கூட்ட முடிவுகளை திருத்தி பிரகாஷை பதிவாளராக நியமித்துள்ளதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி பரந்தாமன் தொடர்ந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக உயர்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.

The post அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Higher Education Department ,Dr. ,Prakash ,Chennai ,Madras High Court ,DMK MLA ,Parantham ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...