×

குஜராத்தை சமாளிக்குமா டெல்லி? அகமதாபாத்தில் இன்று மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. குஜராத் 6 போட்டியில் 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக), 3 தோல்வி (சிஎஸ்கே, பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் கில்(255), சாய்சுதர்சன் 226 ரன் எடுத்து வலு சேர்க்கின்றனர். ஆனால் மற்ற யாரும் குறிப்பிடும் படி ஆடவில்லை. பவுலிங்கில் மோகித் சர்மா 8, உமேஷ் யாதவ் 7 விக்கெட் எடுத்துள்ளனர். ரஷித்கான் பவுலிங் மட்டுமின்றி கடைசி நேரத்தில் பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார்.சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம்.

மறுபுறும் டெல்லி 6 போட்டியில் 2 வெற்றி (சிஎஸ்கே, லக்னோவுக்கு எதிராக) 4 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் தொடக்கம் இதுவரை எடுபடவில்லை. மிடில் ஆர்டரில் ரிஷப் பன்ட், டிரிஸ்டன் ஸ்டப்சை மட்டுமே நம்பி உள்ளது. ஏற்கனவே மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில் வார்னர் கைவிரலில் காயத்தால் இன்று ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவுலிங்கில், கலீல் அகமது 9, குல்தீப் யாதவ் 6 விக்கெட் எடுத்துள்ளனர். வலுவான குஜராத்தை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்த டெல்லி அதிசயத்தை நிகழ்த்த வேண்டி இருக்கும். இரு அணிகளும் இதற்கு முன்3 போட்டிகளில் ஆடி உள்ளன. இதில் 2ல்குஜராத், 1ல் டெல்லி வென்றுள்ளது.

The post குஜராத்தை சமாளிக்குமா டெல்லி? அகமதாபாத்தில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Gujarat ,Ahmedabad ,Gujarat Titans ,Delhi Capitals ,IPL ,Mumbai ,Hyderabad ,Rajasthan ,CSK ,Punjab ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...