×

இறுதி நாளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள எல்.முருகன்; சிலம்பம் சுற்றி வாக்குகள் சேகரித்தார்..!!

நீலகிரி: நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் பகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் இன்று மாலை வரை மட்டுமே ஈடுபட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வேட்பாளர்கள் அனைவரும், அவரவர் தொகுதிகளில் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன், இன்று அன்னூர் பகுதியில் இருந்து வாகன பேரணியாக உதகை வந்தார். அப்போது, மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் புறப்பட்ட அவர், சிலம்ப கலைஞர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி வாக்குகள் சேகரித்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக செல்லும் எல்.முருகன் மாலை 5 மணிக்கு ஊட்டியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொள்கிறார்.

The post இறுதி நாளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள எல்.முருகன்; சிலம்பம் சுற்றி வாக்குகள் சேகரித்தார்..!! appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,Silambam ,Nilgiris ,Nilgiri Parliamentary Constituency ,BJP ,Mettupalayam ,Lok Sabha ,Election Commission ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...