×

இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!

பாரிஸ்: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளது. கேம்ஸ் வைடு ஓபன் இந்த விளையாட்டு களம் அனைவருக்குமானது என தொடங்க உள்ளன ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் தொடர் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. வரும் ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நாசிகர்களுக்கு விருந்தையும், வீரர்களுக்கு விருதையும் வழங்கவுள்ளன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஈபிள் டவருக்கு அருகே உள்ள சாம்ப்-டி-மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

133 நாடுகளை சேர்ந்த சுமார் 10500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகள் அடங்கிய 32 பிரிவு விளையாட்டுகள் என்று 15 நாட்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் களைகட்ட உள்ளன. வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கக்கூடிய மஸ்கட் எனப்படும் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் அப்படி ஒரு மஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ரிஜியன் தொப்பி தான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மஸ்கட். பிரென்ச் புரட்சியின் நூற்றாண்டு நினைவு சின்னமான ஈபிள் தவறுக்கு அருகே பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கும் ஃப்ரிஜியன் தொப்பி மஸ்கட்டாக அறிமுகப்படுத்தபட்டதற்கும் காரணம் உள்ளது.

The post இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Paris ,Olympic Games ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில்...