×

புள்ளி பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் மோதும் டைட்டன்ஸ் – கேப்பிடல்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடர் 17வது சீசனின் 32வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது. குஜராத் விளையாடிய 6 லீக் ஆட்டங்களில் மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய நிலையில்… சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம் தோற்று 6வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முன்னேற, சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். சாஹா, சாய் சுதர்சுன், கில், மில்லர், விஜய் ஷங்கர், உமேஷ், ரஷித் கான், மோகித், நல்கண்டே சீரான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றனர். ஆனால் வெற்றிகள்தான் தொடர்ந்து கிடைக்கவில்லை.

அதே நிலைமையில்தான் ரிஷப் பன்ட் தலைமையிலானடெல்லி அணியும் தடுமாற்றத்தில் இருக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை, லக்னோ அணிகளை வீழ்த்திய கேப்பிடல்ஸ்… மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. அதிரடி வீரர்கள், அசத்தலான பவுலர்கள் இருந்தும், கேப்பிடல்ஸ் அணியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

* இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களில் குஜராத் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
* அதிகபட்சமாக குஜராத் 171, டெல்லி 162 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக டெல்லி 157, குஜராத் 125 ரன் எடுத்துள்ளன.

The post புள்ளி பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் மோதும் டைட்டன்ஸ் – கேப்பிடல்ஸ் appeared first on Dinakaran.

Tags : Titans ,Capitals ,Ahmedabad ,Gujarat Titans ,Delhi Capitals ,IPL T20 Series ,Modi Stadium ,Gujarat ,Mumbai ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் போட்டியில் இன்று குஜராத் டைடன்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல்