×

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி (74) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். இந்திரகுமாரியின் உடல் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக முன்னணியினர், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இந்திராகுமாரியின் உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட்நகரில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

The post முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Indira Kumari ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,MK Stalin ,minister ,DMK ,Indrakumari ,Dinakaran ,
× RELATED சாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட...