×

டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்

நரசிங்கபுரம், ஏப்.17: ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டின் பயன்பாட்டுக்காக பிக்கப் வாகனத்தில் கிரானைட் கல் ஏற்றி வந்தனர். காந்தி சிலை அருகே வந்த போது கோரி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் மகன் ரித்தீஷ்வரன் (13) மற்றும் உறவினரான ஆறுமுகம் மகன் சிவகுமார் (24) ஆகியோர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல டூவீலரில் வந்தனர். அப்போது, டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Narasinghapuram ,Athur Udayarpalayam ,Satish Kumar ,Ritheeshwaran ,Arumugam ,Ghori Street ,Gandhi statue ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு