×

மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க மாட்டறாங்க… பாஜ கொடியை தீயிட்டு கொளுத்திய பாமக நிர்வாகி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூலில் 2 வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த புள்ளநேரி பகுதியை சார்ந்தவன். பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் இருந்து உள்ளேன். பாஜவிற்கு கண்டனம் தெரிவிக்க இந்த வீடியோ பதிவு செய்துள்ளேன். கட்சி நிர்வாகிகளுக்கு பாஜவினர் மரியாதை தருவதில்லை. இது கண்டனத்திற்கு உரியது.

எங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால் பாஜவில் 2 அல்லது 3 ஓட்டுத்தான் உள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு மணிநேரத்திற்கு முன்பு நடந்த ஆலோசனையில் மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாக பேசினர். எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல, கிருஷ்ணகிரியிலயும் கட்சி நிர்வாகி மண்டை உடைத்துள்ளனர். இதுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அவங்க முடிவுக்கு நாங்க கட்டுப்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. இதன்மூலம் பாஜ நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு கண்டம் தெரிவிப்பதோடு, பாஜ கொடியை எரிக்கிறேன் என்று கூறிவிட்டு, அந்த வீடியோவில், பாஜ கொடியை அந்த வாலிபர் எரிக்கிறார். இதுக்கு அப்புறமும் கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும் என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க மாட்டறாங்க… பாஜ கொடியை தீயிட்டு கொளுத்திய பாமக நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Tirupattur ,Madanraj ,Pullaneri, Tirupattur district ,Jolarpet ,Facebook ,Pullaneri ,Jollarpet ,BJP ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்