×

ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்

கொல்கத்தா: ஐபிஎல் 17வது சீசனின் 31வது லீக் போட்டியில் இன்று இரவு பலம் வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சஞ்சுசாம்சன், ஜெய்ஸ்வால், ரியான்பராக், ஜுரெல், ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை கேகேஆர் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.

அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் சால்ட், நரைன் ஆகியோரின் அதிரடி தொடக்கம் செமயாக உள்ளது. கேப்டன் ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், ரஸ்சல், ரகுவன்ஷி போன்றோரும் வெளுத்து வாங்குகின்றனர். இருப்பினும் சாஹல் – மகராஜ் ஆகியோரின் மாயாஜால சுழல் மற்றும் போல்ட், ஆவேஷ்கான், சென் ஆகியோரின் வேகமும் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். கொல்கத்தா அணி முதல் மூன்று போட்டிகளில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற்றது.

4வது ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியை தழுவினாலும், அதில் இருந்து மீண்டு லக்னோவை தோற்கடித்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. 6வது வெற்றிபெற்று முதலிடத்தை தக்கவைக்க ராஜஸ்தான் ராயல்சும், 5வது வெற்றிக்காக கொல்கத்தா நைட்ரைடர்சும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL T20 ,Rajasthan ,Kolkata ,IPL 17th ,Kolkata Knight Riders ,Rajasthan Royals ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...