×

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்

சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவதோடு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு தமிழ் தெலுங்கு தேசிய கட்சி ஆதரவு: ஈவிஎஸ்.ராஜகுமார் நாயுடுவை நிறுவனத் தலைவராக கொண்ட, தமிழகத்தில் உள்ள தெலுங்கு சமுதாய மக்களின் அமைப்பான ‘தமிழ் தெலுங்கு தேசிய கட்சி’, தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

The post பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Part-Time Teachers Federation ,India Alliance ,Chennai ,DMK ,Tamil Nadu Part-Time Teachers Federation ,State Coordinator ,C. Senthilkumar ,
× RELATED தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்: மம்தா விளக்கம்