×

நீர்மோர் பந்தல் திறப்பு

பள்ளிபாளையம், ஏப்.16: கோடை வெயில் காரணமாக, பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்டுவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், விசைத்தறி மற்றும் நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட அலுவல்களை பார்த்தாக வேண்டிய நிலையுள்ளதால், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியில் சென்று வரவேண்டியுள்ளது. இதனையடுத்து, வெப்படை நான்கு ரோட்டில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் காலையில் தொடங்கி மாலை வரை மோர், வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட திமுக துணை செயலாளர் வெப்படை செல்வராஜ் செய்துள்ளார்.

The post நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nemor Pandal ,Pallipalayam ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்