×

கோவையில் இன்று வைகோ பிரசாரம்

 

கோவை, ஏப்.16: இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலை, ஜெயா பேக்கரி சந்திப்பில் இன்று (செவ்வாய்) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பேசுகின்றனர். இப்பொதுக்கூட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post கோவையில் இன்று வைகோ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Coimbatore ,India ,DMK ,Ganapathi Rajkumar ,Jaya Bakery Junction, Sittaputur VKK Menon Road ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...