×

நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்

 

கோவை, ஏப். 16: நகை பறிமுதல் விவகாரத்தில் கோவை சிங்காநல்லூர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். நகை ஆசாரி. இவரது வீட்டிற்கு கடந்த 11.9.2023ல் சீருடை அணியாத போலீசார் சிலர் வந்துள்ளனர். அப்போது திருட்டு நகை எனக்கூறி சுமார் 15 பவுன் தங்க நகைகளை உடனடியாக தருமாறும், இல்லாவிட்டால் வழக்கு பதிவதாகவும் கூறி வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளை எடுத்து சென்றனர்.

லட்சுமணன் விசாரித்ததில், வந்தவர்கள், கோவை சிங்கநாநல்லூர் போலீசார் என்றும், வேறொரு திருட்டு வழக்கில் நகையை லட்சுமணனிடம் இருந்து எடுத்துச் சென்றனர் என்பதும் தெரியவந்தது. அந்த திருட்டு வழக்கில் கைதானவரும் லட்சுமணனிடம் எதையும் கொடுக்கவில்லை என்பதையும் கூறியுள்ளார். இதனால், தனது வீட்டில் இருந்து சிங்காநல்லூர் போலீசார் எடுத்துச் சென்ற 10 பவுன் நகையை மீட்டுத்தரக் கோரி லட்சுமணன், மதுரை ேஜஎம் 5வது நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேசன், சிங்காநல்லூர் ேபாலீசார் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊமச்சிகுளம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore police ,Coimbatore ,Madurai court ,Singhanallur police ,Lakshmanan ,Oomachikulam ,Madurai ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்