×

திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஹீரோ, பாஜக அறிக்கை நாட்டுக்கு வில்லன்: பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாதவரம்: திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது; என்னை முதலமைச்சராக்கிய கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கியது வடசென்னை. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா என்பதை மக்களின் முடிவுதான் தீர்மானிக்கும். தெற்கில் இருந்து நமது குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒலித்துள்ளது.

கொரோனாவை ஒழிக்க இரவில் விளக்கு ஏற்றக் கூறியும் மணி அடிக்கக் கூறியும் ஏதோ விஞ்ஞானி போன்று மோடி பேசினார். பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்தி தொழில்முனைவோரையும், மிடில் கிளாஸ் மக்களையும் கஷ்டப்படுத்தியவர் மோடி. பிரதமர் மோடி பேசும் எத்தனை பொய்களை தான் எங்கள் காதுகள் தாங்கும்; விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வசூல் ராஜாவாக மோடி திகழ்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? RRS-ன் சட்டம் இருக்க வேண்டுமா? இடஒதுக்கீடு வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போவது உங்களின் வாக்குதான்.

பொருளாதாரப் புலி மாதிரி GST சட்டத்தை கொண்டு வந்து தொழில் முனைவோரையும், நடுத்தர மக்களையும் கொடுமைப்படுத்தினார் மோடி. திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஹீரோ, பாஜக அறிக்கை நாட்டுக்கு வில்லன். பிரதமர் மோடி இரவுகளில்தான் சட்டம் கொண்டு வருவார். அப்படி திடீரென ஓர் இரவில்தான் ஊழலை ஒழிக்க வந்த ‘அவதாரப் புருஷனாக’ டிவியில் தோன்றி பணமதிப்பிழப்பை அறிவித்தார்.

The post திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கை ஹீரோ, பாஜக அறிக்கை நாட்டுக்கு வில்லன்: பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,CONGRESS ,PARTY ,BJP ,CHIEF MINISTER ,MLA K. Stalin ,Madhavaram ,MLA Veerasamy ,Thiruvallur Congress ,Sasikant Sendil ,Vadachennai ,Kalaniti Veerasami K. Stalin ,Kolathur ,North Chennai ,CM MLA ,K. Stalin ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...