×

அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, ஏப்.15: வந்தவாசி அருகே அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து டிரைவர் உட்பட 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வந்தவாசி- செய்யாறு சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான டவுன் பஸ் நேற்று வந்தவாசியில் இருந்து மாவளவாடி கிராமத்திற்கு சென்றது. பின்னர், அங்கிருந்து பயணிகளுடன் படூர், எரமலூர், நல்லூர், ஏம்பலம் வழியாக நடுக்குப்பம் நோக்கி சென்றது. கண்டியநல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகேந்திரகுமார்(52) என்பவர் பஸ்ைச ஓட்டி வந்தார்.

தொடர்ந்து, நடுக்குப்பம் கிராமம் அருகே உள்ள குறுகிய வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள விவசாய நிலத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் மகேந்திரகுமார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் படுகாயமடைந்தனர்.

அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டிரைவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பஸ் தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bustle ,Vandavasi ,Vandavasi-Seyyar road ,Mavalavadi ,Dinakaran ,
× RELATED 500 மீட்டர் தூரம் சிதறிய கல் தலையில்...