×

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

ஈரோடு, ஏப். 15: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கம் ஆகிய சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வ.உ.சி.பூங்கா தினசரி மார்க்கெட்டில் பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட துணிப் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட்து.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் பங்கேற்று பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். இதில், அமைப்பின் மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன், மாநகரச் செயலாளர் மு.பாலமுருகன், பொருளாளர் சு.சாதிக் பாட்சா, இளைஞரணியை சேர்ந்த ஜியாவுதீன், மணிகண்டன், கனி மார்கெட் சங்கச் செயலாளர் சாதிக் பாட்சா, சங்கத் துணைச் செயலாளர்‌கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Federation of Merchants Associations ,Erode ,Federation of Tamil Nadu Merchants Associations ,Erode District Youth Team ,Erode Municipal Corporation ,Netaji Daily Market Kani Merchants Association ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...