×

நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்

திருவண்ணாமலை, ஏப்.15: சென்னை நாட்டிய குழுவை சேர்ந்த நடன கலைஞர்கள் திருவண்ணாமலையில் நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபட்டனர். சென்னை நர்த்தனன் நாட்டிய குழுவை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் என்பவர் உட்பட 11 நாட்டிய கலைஞர்கள் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று திருவண்ணாமலையில் நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இதையொட்டி, நேற்று மாலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தங்களது நாட்டிய கிரிவலத்தை தொடங்கினர். நள்ளிரவு வரை பக்தி பாடல்களுக்கு நாட்டியமாடியபடி 14 கிலோ மீட்டர் தூரம் சென்று கிரிவலத்தை நிறைவு செய்தனர். நாட்டியத்தின் புகழை உலகுக்கு தெரிவிக்கும் வகையிலும், உலக நன்மை வேண்டியும் திருவண்ணாமலையில் நடனமாடியபடி கிரிவலம் சென்றதாக இக்குழுவினர் தெரிவித்தனர். நாட்டிய குழுவினர் நடனமாடியபடி கிரிவலம் சென்றதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

The post நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர் appeared first on Dinakaran.

Tags : Krivalam ,Chennai ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Jayaweerapandian ,Chennai Narthanan ,Tamil New Year's Day ,
× RELATED வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் * சிறப்பு...