×

அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

வலங்கைமான், ஏப். 15: நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த மூன்றாவது கட்ட பயிற்சியை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு  நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் பண பட்டுவாடா உள்ளிட்டவர்களை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் நாடாளுமன்றம் மற்றும் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளும் விதமாக மூன்று பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் 169.நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நன்னிலம் குடவாசல் வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த 1691 வாக்கு சாவடி அலுவலர்களுக்கான இரண்டு கட்ட பயிற்சிகள் சுவாமி தயானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிலையில் மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தேர்தல் பயிற்சி வகுப்பை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்மணி, நன்னிலம் தாசில்தார் குருமூர்த்தி, குடவாசல் தாசில்தார் தேவகி வலங்கைமான் தாசில்தார் ரஷ்யா பேகம் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nannilam Assembly ,Thiruvarur District ,Election Officer ,Valangaiman ,Thiruvarur ,District ,Collector ,Charu ,Nannilam ,India ,18th Lok Sabha election ,Election ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா