×

பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர்,ஏப்.15: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டக் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ் வருடங்களில் சோப கிருது வருடம் முடிவடைந்து சித்திரை மாதத்தின் தொடக்க நாளான நேற்று (14ம்தேதி) குரோதி ஆண்டு பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியக்கோயில் களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வாரத்தின் திங்கள்- வெள்ளிக் கிழமை களில் மட்டுமே நடை திறக்கப்படும். ஆனால் தமிழ் புத் தாண்டு தினத்தையொட்டி நேற்று (14 ம் தேதி) காலை 6:30 மணி முதல் இரவு 9மணிவரைகோயில் நடைதிறக்கப் பட்டு அம்ம னுக்கு 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. மேலும் 40-கேன் பால்,பஞ்சாமிர்தம், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் கோவில் பணியாளர் கள் இதற்கான ஏற்பாடுக ளைச் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான இந்திய தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள வாலிகண்ட புரம் வாலாம் பிகை சமேத வாலிஸ்வரர் கோவிலில் புத்தா ண்டு தினத்தையொட்டி காலைமுதல் மாலைவரைகோயில் நடைதிறக்கப் பட்டு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.கோயில் குருக்கள் ஜெயச் சந்திரன், செல்லப்பா, குமார் ஆகியோர் பூஜை களை முன்னின்று நடத்தி னர். அதேபோல் பெரம்ப லூர் மாவட்டத்தின் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்ற வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை அருள்மிகு குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில், திருவாளந்துறை அருள்மிகு தோளீஸ்வரர் கோயில் ஆகியவற் றிலும் புத்தாண்டு தினத் தையொட்டி சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது.

இதேபோல் பெரம்பலூர் நக ரில் உள்ள  அகிலாண் டேஸ்வரி சமேத  பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் நேற்று சித்திரைத் திரு விழா தமிழ்வருட பிறப்பை முன்னிட்டு காலை 9மணிய ளவில் ஈசன்அம்பாள் மூல வர் மற்றும் பஞ்சமூர்த்தி உற்சவங்களுக்கும்  மாரியம்மன்,  வெள்ளந் தாங்கி அம்மன்,  செல்லி யம்மன் ஆகியஉற்சவதெய் வங்களுக்கும் சிறப்பு அபி ஷேகம் முடித்து பகல் 12 மணியளவில் மகா தீபாரா தனை காண்பித்து, பக்தர் களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது.

பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரி யார் மற்றும் முல்லை சிவா ச்சாரியார் செய்திருந்தனர். விழாஏற்பாடுகளை தக்கார் லட்சுமணன், செயல் அலு வலர்கோயிந்தராஜன், பெரம்பலூர் நகர நலச் சங் கத்தினர் செய்திருந்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு ஈசனை வழிபட்ட னர். இரவு ஈசன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திரு வீதி உலா வந்து பக்தர்க ளுக்கு அருள்பாளித்தார்.

மேலும் பெரம்பலூரில்மரகத வல்லித் தாயார் சமேத மத னகோபால சுவாமி கோயிலில், புத்தாண்டு தினத்தையொட்டி பட்டாபி பட்டாச்சாரியார் சிறப்பு அபிஷேகத்தை நடத்தி னார். இதில் பெரம்பலூர், அரணாரை,துறைமங்கலம், எளம்பலூர், விளாமுத்தூர், நொச்சியம், நெடுவாசல், சிறுவாச்சூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெரு மாள் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து முக்கியக் கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை யொட்டி சிறப்பு வழிபாடு கள் நடைபெற்றன.

The post பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Perambalur ,Tamil New Year ,Kurothi year ,Chitrai ,Sopa Kritu year ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி