×

திரவுபதி அம்மன் பூங்கரக உற்சவம்

ஓசூர், ஏப்.15: ஓசூர் அருகே திரவுபதி அம்மன் பூங்கரகத்தை சுமந்து பக்தர்கள் வழிபட்டனர். ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில், 500 ஆண்டு பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தெலுங்கு வருடப் பிறப்பான, யுகாதியை முன்னிட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் தேதி வியாழக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லக்கு மற்றும் கரகம் எடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு பல்லக்கு உற்சவம் மற்றும் திரவுபதி அம்மன் கரக உற்சவம் நடைபெற்றது. இதில் 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை, பூசாரி சுமந்து நடனம் ஆடி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

The post திரவுபதி அம்மன் பூங்கரக உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Draupadi Amman Bungaraka Utsavam ,Hosur ,Goddess ,Drarubati ,Bagalur village ,Fort Mariamman Temple ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்