×

பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு

பெரம்பலூர்,ஏப்.14: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தமிழ் வருடங்களில் சோப கிருது வருடம் முடிவடைந்து சித்திரை மாதத்தின் தொடக்க நாளான இன்று (14ம்தேதி) குரோதி ஆண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த நாளையொட்டி பெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுக ளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் வாரத்தின் திங்கள்- வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைதிறக்கப்படும்.ஆனால் தமிழ் புத்தாண்டு தினத்தை யொட்டி இன்று (14 ம்தேதி) காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடைதிறக்கப் பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை மற்றும் கோவில் பணியா ளர்கள் இதற்கான ஏற் பாடுகளை செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலிஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி காலை முதல் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. கோயில் குருக்கள் ஜெயச்சந்திரன், செல்லப்பா, குமார் ஆகியோர் பூஜைகளை முன் நின்று நடத்துகின்றனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது .

இதேபோல் பெரம்பலூர் நகரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில், புத்தாண்டு தினத்தை ஒட்டி பட்டாபி பட்டாச்சாரியார் சிறப்பு அபிஷேகத்தை நடத்துகிறார். மாலை 6:00 மணிக்கு சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அருள் மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தினத்தை யொட்டி கௌரிசங்கர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை நடத்துகிறார் . இரவு 7:30 மணிக்கு சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து முக்கிய கோயில்களிலும் தமிழ்புத்தாண்டு தினத்தை யொட்டிசிறப்புவழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகளில் உங்களுக்கு வழங்கப்படும் தகவல் களை முழுமையாக அறிந்து, நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாது காப்பாக கையாளவேண்டும்.

The post பெரம்பலூர் மாவட்ட கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Tamil New Year ,Sopa Kritu year ,Chitrai ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி